நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 20,836 கண்டுபிடிப்புகளில் சிறப்பானவையாக தேர்வு செய்யப்பட்ட
38 கண்டு பிடிப்புகளில் நெல்லை சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளி மாணவன்கவுதம் பிரவீன் அறிவியல் கண்டு பிடிப்பும் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையை சார்ந்த ஆமதாபாத்தில் அமைந்துள்ள நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேசன் நடத்திய இக்னைட்2013 என்ற அறிவியல் போட்டியில் நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 20,836 கண்டுபிடிப்புகளில் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 38 கண்டுபிடிப்புகளில் நெல்லை சங்கர்நகர் ஸ்ரீ ஜெயந்திரா பள்ளி மாணவன் கவுதமன் பிரவீன் புதிதாக கண்டுபிடித்துள்ள தரையில் நின்றபடியே பல்புகளை எளிதில் கழற்றிமாட்டும் புதிய கருவியும் ஒன்று. வரும் காலங்களில் இந்த புதிய கருவி நடைமுறைக்கு வரும்பொழுது உங்கள் வீடுகள், கடைகள், உயரமான கட்டடங்கலுள்ள பல்புகளை மாட்டுவதற்கு மேசை, நாற்காலி, ஏறி போன்றவை தேவையில்லை. தரையில் நின்றபடியே எளிதாக பல்புகளை கழற்றி மாட்டலாம். வரும் நவ.19ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியில் முன்னாள் குடியரசு தலைவர் கண்டுபிடிப்புகளை நேரில் பார்வையிட்டு இளம் விஞ்ஞானிகளை பாராட்டி பரிசுவழங்குகிறார்.இதை கண்டுபிடித்த மாணவன் கவுதம் பிரவீன் நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர். இவர் ஜெயேந்திரா பள்ளியில் 11ம் வகுப்பு வணிகவியல் படித்து வருகிறார். மாணவனை பள்ளி முதல்வர் உஷாராமன், தாளாளர் நிர்மலா ராமரத்தினம், துணை முதல்வர் கங்கா மணி, மாணவனின் தந்தை ஆறுமுகநயினார், முத்துலெட்சுமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
kalviseithi
Posted via BlogPost

No comments:
Post a Comment